சென் காலன் கன்டோனில் உள்ள ஓபர்ஸ்ட்ராஸ் 137 இல் உள்ள ஏவியா பெட்ரோல் நிலையத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத ஒருவர் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளார்.
இன்று காலை 6:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெட்ரோல் நிலைய ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டிய அவர் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
கன்டோனல் காவல்துறையினரின் உடனடித் தேடுதலை ஆரம்பித்த போதும், குற்றவாளி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூலம்- 20min

