பியல் பகுதியில் வெவ்வேறு இடங்களில் மூன்று பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை 10:40 மணியளவில், சீலர்வெக் மற்றும் ஸ்கோல்-ஸ்ட்ராஸ்ஸுக்கு இடையிலான பார்லெட்வால்ட் காட்டில் ஒரு பெண் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் பிரெஞ்சு மொழியில் பேசிய ஆண் ஒருவரால், பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் சத்தமாகக் கத்தியதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொண்டுள்ளார்.
அதன் பிறகு குற்றவாளி அவளை விட்டுவிட்டு ஸ்கோல்-ஸ்ட்ராஸ்ஸை நோக்கி கால்நடையாக ஓடிவிட்டதாக பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், காலை 11:45 மணியளவில், ஸ்கோல் தெருவில் உள்ள 14வது இலக்க இடத்தில் மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
பிற்பகல் 12:50 மணியளவில், ஓபரர் குவாயில் உள்ள பீயலில் வீட்டு இலக்கம் 122க்கு அருகில் பாலியல் வன்கொடுமை குறித்த மூன்றாவது புகார் பெர்ன் கன்டோனல் காவல்துறைக்கு கிடைத்தது.
அங்கு, ஒரு பெண் ஒரு ஆணால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டார். அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடிந்தது, குற்றவாளி தெரியாத திசையில் தப்பி ஓடிவிட்டார்.
மூன்று சம்பவங்களிலும் தொடர்புடைய நபர் 25 முதல் 30 வயதுடையவர், 180 முதல் 200 சென்டிமீட்டர் உயரம், கருமையான தோல் மற்றும் கருமையான கூந்தல் கொண்டவர், பெண்களிடம் பிரெஞ்சு மொழியில் பேசினார். சம்பவம் நடந்த நேரத்தில், அவர் அரைக்காற்சட்டை அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min

