சூரிச்ஹார்ன் அருகே நேற்று இரவு 10:30 மணியளவில், சூரிச் ஏரிக்குள் நுழைந்த ஒருவர், சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி காணாமல் போனார்.
அவசர சேவைகள் அவரை சிறிது நேரத்திற்குப் பிறகு நீருக்கடியில் கண்டுபிடித்த போதும் அவரது உயிரைக் காப்பற்ற முடியவில்லை.
அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவரது அடையாளம், மரணத்திற்கான காரணம் மற்றும் விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min.

