14.2 C
New York
Sunday, October 11, 2026

கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி.

பேடன் ( Baden) இல்  கைதி ஒருவர், வாகனத்தில் ஏறுவதற்கு முன்னர் தப்பிச் சென்றுள்ளார்.

வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

தப்பியோடியவர் 23 வயது அல்பேனியர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தப்பிச் செல்லும் போது கைவிலங்கும் போடப்பட்டிருந்தார்.

பல பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் உடனடியாகத் தேடுதல் வேட்டை நடத்திய போதிலும், கைதி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles