எப்மதிங்கனில் (மௌர் நகராட்சி) வாகன நிறுத்துமிடத்திற்குள் திரும்பும்போது , 23 வயது பயணி ஒருவர் காரில் இருந்து கீழே தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
லோஹ்விஸ்ட்ராஸ்ஸில் வெள்ளிக்கிழமை மாலை 6:15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சூரிச் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
45 வயதுடைய ஒருவர் வாகனம் ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது இடதுபுறமாக திரும்பிய போதே, இன்னும் தெரியாத காரணங்களால், பயணி வீதியில் விழுந்தார்.
காவல்துறை சம்பவ இடத்தில் ஆதாரங்களைப் பெற்று ஓட்டுநரிடம் விசாரித்துள்ளது.
மூலம் – 20min.

