ஸ்விஸ்,கன்டோனில் ரோதென்தர்மில் உள்ள H8 பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரு வாகன ஓட்டிகளும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று பிற்பகல் 2:50 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
35 வயதுடைய ஒருவர் சாட்டலில் இருந்து ரோதென்தர்ம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அதே சாலையில் எதிர் திசையில் வந்த 24 வயதுடைய ஒருவர், ரோதென்தர்மில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும்போது நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக கன்டோனல் காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால், நான்கு மணி நேரம் பிரதான வீதி மூடப்பட்டது
மூலம் – 20min.

