லூசெர்ன் கன்டோனில் உள்ள வில்லிசாவில் உள்ள ப்ருக்மட் 1 இல் உள்ள ஒரு வங்கி ஒன்றில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல், மாலை 4 மணியளவில், வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், வங்கி ஊழியரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
ஆயுதமேந்திய கொள்ளை தொடர்பாக, வங்கி கட்டிடத்தின் அருகே அதனை அவதானித்த சாட்சிகள் அல்லது குற்றவாளிகள் தப்பிச் சென்றதைக் கண்ட சாட்சிகளை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.
மூலம்- 20min,