இன்னெர்ட்கிர்ச்சென் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை, மாலை 4:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பெர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்னெர்ட்கிர்ச்செனில் இருந்து மெய்ரிங்கன் நோக்கி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் குழு ஒன்று சென்று கொண்டிருந்தது.
எதிர் பாதையில் முந்திச் செல்ல முயன்ற போது ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் வலது பக்கத்தில் உள்ள ஒரு கம்பத்தில் மோதி, சறுக்கி, எதிர் பாதையில் எதிரே வந்த ஒரு காரின் மீது மோதினார்.
இதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்தவர் ஸ்பெயினில் வசிக்கும் 73 வயது ஸ்பானிஷ் குடிமகன் ஆவார்.
மூலம்- 20min,