15.8 C
New York
Thursday, September 11, 2025

பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட ரயில் பாதை.

பெர்னில் நேற்று மாலை சுமார் 2,000 பேர் ஒன்றுகூடி, காசா மீதான இஸ்ரேல் முற்றுகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தக் குழு பஹ்ன்ஹோஃப்பிளாட்ஸில் கூடி, மாலை 7 மணியளவில் பழைய நகரம் வழியாக அணிவகுத்துச் சென்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பன்டெஸ்பிளாட்ஸிலிருந்து விலகி இருக்க பொலிசார் அனைத்து குறுக்கு வீதிகளையும் தடுத்தனர்.

பின்னர் அவர்கள் திரும்பி ரயில் நிலையத்திற்கு சென்று  அங்கு, நிலைய கட்டடத்தில் உள்ள சந்திப்பு இடத்தில் கூடி, மெகாஃபோன்கள் மூலம் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு குழு ரயில் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களை தண்டவாளத்தை விட்டு வெளியேறுமாறு பொலிசார் உத்தரவிட்டனர்.

ஆயுதங்களுடன் கூடிய பொலிஸ் அதிகாரிகள் தண்டவாளத்தை நெருங்கிய நிலையில், பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தண்டவாளத்தை விட்டு வெளியேறினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுற்றியுள்ள பகுதி சுற்றி வளைக்கப்பட்ட பின்னர், இரவு 8 மணியளவில் போராட்டம் மெதுவாக கலைந்தது.

இஸ்ரேலுடனான அனைத்து ஒத்துழைப்பையும் நிறுத்தக் கோரியும், காசா பகுதிக்கான சுயாதீனமான மனிதாபிமான உணவு விநியோகத்தை வலியுறுத்தியும், இந்தப் பேரணிக்கு “பலஸ்தீனத்திற்கான பெர்ன்” கூட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டது.

மூலம்- 20min,

Related Articles

Latest Articles