A18 நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.நேற்றுக் காலை, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
30 வயது ஓட்டுநர் ஒருவர் லாஃபென் நோக்கி A18 நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஒரு காரை முந்திச் செல்வதற்காக, இரட்டை பாதுகாப்பு கோட்டைக் கடந்தார்.
இதன் விளைவாக, சரியாகச் சென்று கொண்டிருந்த எதிரே வந்த ஒரு காருடன் பக்கவாட்டில் மோதியது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது காருடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுநரும், 27 வயது பயணியும் பலத்த காயமடைந்தனர். இரண்டாவது காரின் 59 வயது ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த மூன்று பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூன்றாவது காரின் 39 வயது ஓட்டுநர் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
இந்த விபத்தினால் A18 மோட்டார் பாதை ஐந்து மணி நேரம் மூடப்பட்டது. மூன்று கார்களும் சேதமடைந்தன.
மூலம்- 20min.