சுவிட்சர்லாந்தில், மின்னணு வாக்குப் பதிவு முறையை அறிமுகப்படுத்த அதிகளவானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான YouGov மற்றும் சுவிஸ் போஸ்ட் நடத்திய ஒரு கணக்கெடுப்பில்,பங்கேற்ற சுமார் 2,000 பேரில், 78 வீதமானோர், கடிதம் மூலமாகவும் வாக்குப் பெட்டியிலும் வாக்களிப்பதற்குப் பதிலாக,மின்னணு வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 18 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர்.
பதிலளித்தவர்களில் சுமார் 73% பேர் இந்த அறிமுகம் வாக்களிப்பதை எளிதாக்கும் என்றும் 72% பேர் அதிக வாக்குப்பதிவு இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பதிலளித்தவர்களில் 43% பேர், வாக்களிக்கும் ரகசியம் பாதிக்கப்படக்கூடும் என்று அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மூலம்- swissinfo