லூசெர்ன் ஏரியில் இன்று காலை சிறிய விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.கெர்சிட்டனுக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லூசெர்ன் காவல்துறை ஒரு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும்,விமானவிபத்துக்கான காரணம் அல்லது விமானத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் தற்போது சம்பவ இடத்தில் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
ஏரியில் விழுந்த விமானம் ஒரு ஜெர்மன் வாடகை விமானமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Flightradar24 இன் படி, அது நியூரம்பெர்க்கின் வடக்கே உள்ள Burg Feuerstein விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
Flightradar தரவுகளின்படி, ஜெட் விமானம் காலை 8:30 மணிக்கு Buochs விமான நிலையத்திலிருந்து Burg Feuerstein நோக்கிப் புறப்பட்டது.
இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விமானம் திரும்பி, சுழன்று, Buochs க்குத் திரும்பியது.
ஒரு மணி நேரம் கழித்து, 9.39 மணியளவில் ஜெட் மீண்டும் புறப்பட்ட நிலையில், சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர், உயரத்தை இழந்து ஏரியில் விழுந்துள்ளது.
விமானம் ஏன் திரும்பி, பூச்ஸுக்குத் திரும்பி, பின்னர் மீண்டும் புறப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- bluewin