ப்ரூக்கில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் விநியோக வான் ஓட்டுநர் பலியானார்.
ப்ரூக்கிலிருந்து லாஃபோஹர் நோக்கிச் சென்ற விநியோக வாகனத்தின் ஓட்டுநர் வீதியை விட்டு விலகி, ஒரு வேலியைக் கடந்து, ஒரு புல்வெளியைக் கடந்து, ஒரு தோட்ட வேலியில் மோதினார்.
நேற்று பிற்பகல் 2 மணிக்கு சற்று முன்னர் இடம்பெற்ற இந்த விபத்துக்கான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும். ஓட்டுநருக்கு மருத்துவப் பிரச்சினை இருந்திருக்கலாம் என்றும் ஆர்காவ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த வாகனம் வேலியைக் கடந்து புல்வெளிக்குள் செல்வதற்கு முன்னர், ஒரு பாதசாரி கடவை மற்றும் நடைபாதையைக் கடந்து சென்றுள்ளது,
விபத்து நடந்த நேரத்தில், நடைபாதையிலோ அல்லது பாதசாரி கடவையிலோ யாரும் இல்லை, என்பதால் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.