சுவிட்சர்லாந்தில் வீடுகளின் விலை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டின், முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் வீடுகளின் விலை 1.9% அதிகரித்துள்ளது,
அதே நேரத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு 5% ஆக இருந்தது என்று மத்திய புள்ளிவிவர அலுவலகம் (FSO) தெரிவித்துள்ளது.
குடியிருப்பு சொத்து விலைக் குறியீடு (RPI) வெளியிட்டுள்ள தரவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
ஒற்றை குடும்ப வீடுகள் ஆண்டுக்கு 3.9%, பிளாட்கள் 6.0% அதிகரித்துள்ளன.
அதே நேரத்தில் காலாண்டு அடிப்படையில் மாற்றங்கள் முறையே +1.5% மற்றும் +2.2% ஆகும்.
மூலம்- swissinfo

