27.9 C
New York
Friday, August 28, 2026

சூரிச் துப்பாக்கி கடையில் மீண்டும் கொள்ளை முயற்சி.

சூரிச் கன்டோனில் உள்ள ஒரு துப்பாக்கி கடையில் மீண்டும் ஒரு கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

நேற்று அதிகாலை 5 மணிக்குப் பின்னர் உள்ளூர்வாசி ஒருவர் காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு, ஹோரி ZH இல் உள்ள ஒரு துப்பாக்கி கடைக்குள் நுழைவதற்கு முயற்சி நடப்பதாகக் கூறினார்.

சூரிச் மாகாண காவல்துறையின் ரோந்துப் படையினரின் விரைந்து சென்று,  ஒரு புதரில் மறைந்திருந்த ஒரு சந்தேக நபரைக் கண்டுபிடித்து,  கைது செய்துள்ளனர்.

குற்றவாளிகள் அண்மையில் பிஃபுங்கன், கோசாவ், விட்டன்பாக் மற்றும் ஆல்ட்ஸ்டாட்டன் ஆகிய இடங்களில் உள்ள துப்பாக்கி கடைகளுக்குள் நுழைந்து, துப்பாக்கிகளை கொள்ளையடித்தனர்.

குற்றம் நடந்த இடத்தில், கிளாட்ஃபெல்டனில் முன்னர் திருடப்பட்ட ஒரு வாகனத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட 21 வயது பிரெஞ்சுக்காரர் பொலிசாரால் விசாரிக்கப்பட்ட பின்னர் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் வேறு குற்றங்களுடன் தொடர்புடையவரா என்பதை விசாரணை நடத்தி வருகிறது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles