28.4 C
New York
Thursday, August 13, 2026

அதிகரிக்கும் நீச்சல் விபத்துகள்- ஒருவர் பலி, இன்னொருவரைக் காணவில்லை.

ஆர்காவ் பகுதியில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக பெருமளவானோர் நீர் நிலைகளை நாடுகின்ற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பல நீச்சல் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 35 வயதான ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், 20 வயதான மற்றொருவரைத் தேடும் பணி தொடர்கிறது.

மோலின் அருகே ரைன் ஆற்றில் 35 வயதான ஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கெபென்ஸ்டோர்ஃப் அருகே ராயஸ் ஆற்றில் குதித்த 20 வயதான சோமாலிய இளைஞர் ஒருவர் இன்னும் காணாமல் போயுள்ளார்.

லாஃபென்பர்க்கில் ரைன் ஆற்றில் இருந்து 43 வயதான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டார்.

வெப்பமான காலநிலையில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மாகாண காவல்துறை எச்சரித்துள்ளது.

கோடைக்காலத்தின் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீந்தும்போது கவனமாக இருக்கவும், மது அருந்த வேண்டாம் என்றும், தங்களின் நீச்சல் திறனை யதார்த்தமாக மதிப்பிடவும் மக்களை மீண்டும் எச்சரித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles