5.3 C
New York
Tuesday, December 30, 2025

அமெரிக்க வரிகள் குறித்து பெடரல் கவுன்சில் நாளை அவசர கூட்டம்.

சுவிஸ் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 39 சதவீத தண்டனை வரிகளுக்கான எதிர்வினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக பெடரல் கவுன்சில் நாளை அவசர கூட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த வரிகள் ஓகஸ்ட் 7 ஆம் திகதி அமுலுக்கு வரவிருக்கும் நிலையில், இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

வணிக பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் இதுகுறித்த  விரைவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பதிலடி வரிகள்  முதல் ஒரு பணிக்குழுவை நிறுவுதல் வரை பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் சோசலிஸ்ட் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க அழைப்பு விடுத்துள்ளது.

விளைவுகளைத் தணிக்கும் பொருட்டு, ஏற்றுமதித் துறையின் சுமையைக் குறைக்க குறைந்தபட்ச வரியைக் குறைப்பது குறித்தும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles