ஜெனீவாவிற்கு அருகிலுள்ள வெர்னியரில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ஆசிய குளவிக் கூட்டத்தால் தாக்கப்பட்ட 62 வயது நபர் ஒருவர் சுயநினைனை இழந்தார்.
பிளாக்பெர்ரி கிளைகளை அவர் வெட்டிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக குளவிகளின் கூட்டைத் தொந்தரவு செய்தார்.
இரண்டு வினாடிகளுக்குள், அவரை சூழ்ந்து கொண்டு குளவிகள் தாக்கத் தொடங்கின.
விரைவாக எதிர்வினையாற்றி வீட்டிற்குள் ஓடினார். குறைந்தது எட்டு இடங்களில் குளவிகள் கொட்டியிருந்தன.சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து விழுந்தார்.
நினைவு திரும்பிய பிறகு, அவர் உடனடியாக அவசர சேவைகளுக்கு தகவல் அளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
மூலம்- 20min.

