சென் காலன், வைல்ட்ஹவுஸில் உள்ள “நாட்லிகர்” இன் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மலைப்பாதையில் பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை, மாலை 6:45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், 66 வயதான சுவிஸ் பெண் ஒருவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணும் ஒரு தோழரும் “நாட்லிகர்” சிகரத்திற்குக் கீழே உள்ள ஒரு மலைப்பாதையில் நடைபயணம் மேற்கொண்டிருந்தனர்.
அப்போது பெண் இடது பக்க சரிவில் சுமார் 50 மீட்டர் கீழே விழுந்தார். அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.