பிரெஞ்சு மாகாணமான ஆட் பகுதியில், காட்டுத் தீயினால், 16,000 ஹெக்டேர் காடுகள் அழிந்துள்ளன.
செயிண்ட்-லோரன்ட்-டி-லா-கேப்ரெரிஸில் ஒரு பெண் காட்டுத் தீயினால் கொல்லப்பட்டார். மேலும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர்.
1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான காட்டுத் தீ இது என்று பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சில மணிநேரங்களில் பெருமளவிலான காடுகள் எரிந்து போயிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதகமான வானிலை, தீ விரைவாக பரவுவதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 அவசர வாகனங்கள், தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் 2,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
அதேவேளை, தெற்கு ஐரோப்பா முழுவதும் தற்போது கடுமையான காட்டுத் தீ ஆபத்து உள்ளது.
ஸ்பெயினில், டாரிஃபா அருகே ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஹோட்டல்கள் மற்றும் ஒரு முகாம் தளத்திலிருந்து சுமார் 1,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இத்தாலி மற்றும் போர்ச்சுகலில் அவசர சேவைகள் தீப்பிழம்புகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.
ஒட்டுமொத்தமாக, தெற்கு ஐரோப்பா வெப்பம், காற்று மற்றும் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo