சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகளுக்கும் அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது.
30 வீத வரி விதிக்கப்படும் சுவிட்சர்லாந்து பொருட்களின் பட்டியலில் தங்க கட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்க சுங்கத் துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுடுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து 2024 ஜூலை முதல் 2025 ஜூன் வரை அமெரிக்காவிற்கு 61.5 பில்லியன் டொலர் தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது.
ஓகஸ்ட் 7 ஆம் திகதி முதல் நடைமுறையில் உள்ள 39 சதவீத வரிகள் அமுல்படுத்தப்பட்டால், இந்த அளவு தங்கத்திற்கு 24 பில்லியன் டொலர் வரி விதிக்கப்படும்.
மூலம்- 20min.

