லொசானில் உள்ள பிளேஸ் சென்-ஃபிரான்சுவாவில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பெருமளவில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகளால் UBS வங்கி கட்டடத்தை மற்றும் முழு சதுக்கமும் சுற்றி வளைக்கப்பட்டது.
DARD (விரைவு நடவடிக்கை மற்றும் தடுப்புத் துறை), வௌட் ஜென்டர்மெரி மற்றும் GIPL (லொசானே பொலிஸ் தலையீட்டுக் குழு) ஆகியவற்றிலிருந்து ஆறு பொலிஸ் ரோந்துப் படைகள் அங்கு நிறுத்தப்பட்டன.
எனினும், சுமார் பிற்பகல் 3:10 மணியளவில், DARD அதிகாரிகள் கட்டடத்தையும் சதுக்கத்தையும் விட்டு வெளியேறினர்.
அதன்பின்னர் அது மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
தமக்கு கிடைத்த தகவல்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இருப்பினும், பொதுமக்களுக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
20 அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்துகின்றனர்
எனினும் பொலிசாரால் கூடுதல் விவரங்களை வழங்க முடியவில்லை. என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- 20min.

