சுவிட்சர்லாந்தின் விமான உற்பத்தி நிறுவனமான, பிலாட்டஸ், அமெரிக்க சந்தைக்கு விமானங்களை விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.
சுவிஸ் பொருட்கள் மீது அமெரிக்க விதித்துள்ள 39% வரிகள் போட்டித்தன்மைக்கு மிகவும் பாதகமானவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது வரிகளால் ஏற்படும் அதிக செலவுகள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் போட்டி குறைபாடுகள் வாடிக்கையாளர்களிடையே நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பிலாட்டஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுவிஸ் மாகாணமான நிட்வால்டனில் உள்ள ஸ்டான்ஸை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா ஒரு முக்கிய சந்தையாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அது உற்பத்தி செய்யும் அனைத்து PC-12கள் மற்றும் PC-24 விமானங்களில் பத்தில் நான்கு அமெரிக்காவிற்கு செல்கின்றன.
அமெரிக்காவைத் தவிர வேறு சந்தைகளுக்கு விமானத்தை விற்பனை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக பிலாட்டஸ் கூறுகிறது.
மூலம்- swissinfo

