0.8 C
New York
Monday, December 29, 2025

இரகசியங்களை ரஷ்யாவுக்கு வழங்கிய சுவிஸ் இராணுவ கேணல்.

சுவிஸ் இராணுவத்தைச் சேர்ந்த  ஒரு உயர் அதிகாரி ரஷ்யாவுக்கு இராணுவ இரகசியங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய கேணல் தர அதிகாரியே இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

வியன்னாவில் உள்ள சுவிஸ் தூதரகத்திலும் இவர் பணியாற்றியிருந்தார். இவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2024 கோடையில் ரஷ்யாவிற்கு இரகசிய தகவல்களை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்திருந்து 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அவரை திரும்ப அழைத்ததாக பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இராணுவ நீதிமன்ற விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இரண்டு புலனாய்வுத்துறை மேற்பார்வை நிறுவனங்களான தேசிய பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம் (AB-ND) மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான பெடரல் அலுவலகம் (GPDel) ஆகியவையும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles