மேற்கு சுவிட்சர்லாந்து மற்றும் டிசினோவின் சில பகுதிகளுக்கு உயர் வெப்ப நிலை தொடர்பாக 5 இல் 3 அபாய அளவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா ஏரி பகுதி, லோயர் வலய்ஸ், மூன்று ஏரிகள் பகுதி, ஃப்ரிபோர்க்கில் உள்ள ப்ரோய் மற்றும் டிசினோ கன்டோன் ஆகியவை அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சராசரி தினசரி வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் 25°C ஐ விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டால் 3 அபாய நிலை அறிவிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டருக்கும் குறைவான பகுதிகளில், புதன்கிழமை மாலைக்குள் அதிகபட்ச வெப்பநிலை 32-35°C மற்றும் ஈரப்பதம் 35-45% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பிற பகுதிகளுக்கு, ஆபத்து மிதமானதாகவோ அல்லது இல்லாததாகவோ கருதப்படுகிறது.
இருப்பினும், மத்திய பீடபூமி பகுதியில் வெப்பநிலை சில நேரங்களில் 34°C ஆக உயரக்கூடும்.
மூலம்- swissinfo