பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க பிரதிநிதிகளும் சுவிஸ் தேசிய கவுன்சில் உறுப்பினர்களும் இரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து-அமெரிக்க நாடாளுமன்ற சங்கத்தின் சுவிஸ் பிரதிநிதிகளும், பிரதிநிதிகள் சபையில் உள்ள சுவிஸ் நட்புக் குழுவான பிரெண்ட்ஸ் ஒவ் சுவிட்சர்லாந்து குழுவின் அமெரிக்க உறுப்பினர்களும் நேற்று ஜெனீவாவில் உள்ள ஐந்து நட்சத்திர இன்டர்கொண்டினென்டல் ஹோட்டலில் சந்தித்தனர்.
இருப்பினும், இரு குழுக்களும் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
நாடாளுமன்ற சங்கத்தின் தலைவரான தேசிய கவுன்சிலர் டேமியன் கோட்டியரிடம் இதுபற்றி கேட்டபோது எதுவும் கூறவில்லை.
இவருடன், தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் ஃபேபியன் மோலினா (SP/ZH), சைமன் மைக்கேல் (FDP/SO), மற்றும் லாரன்ட் வெஹ்ர்லி (FDP/VD) ஆகியோரும் சந்திப்பில் ஈடுபட்டனர்.
அவர்கள் எட்டு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 20 குடியரசுக் கட்சியினர் உட்பட 28 காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தனர்.
மூலம்- 20 min.