சூரிச்-ஹாங்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை, இரவு 11 மணிக்கு பெட்ரோல் நிலையக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அச்சுறுத்தி பணத்தைக் கோரிய போது, கைகலப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு குற்றவாளி எந்த பொருட்களையும் எடுக்காமல் நகர மையத்தை நோக்கி தப்பிச் சென்றார்.
உடனடி நடத்தப்பட்ட சோதனையின் போது, மாவட்டம் 3 இல் ஒரு ரோந்து காரில் சென்ற பொலிசார், கொள்ளையில் ஈடுபட முயன்றவருடன் பொருந்தக்கூடிய ஒரு சிறுவனைக் கண்டனர்.
அவர்கள் 15 வயது ஆப்கானிஸ்தான் நாட்டவரைக் கைது செய்து, மேலும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மூலம்-20min

