வின்டர்தூரில் உள்ள டோஸ் வைடன் புன்டென் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில், 51 வயதுடைய ஜேர்மானியர் ஒருவர் உயிரிழந்தார்.
இரவு 10:30 மணியளவில், தோட்டத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய குற்றவாளி, 37 வயதான பிரேசிலியர் என்றும் அவர் தப்பிய நிலையில், காவல்துறையினரின் தேடுதல் வேட்டையின் விளைவாக, அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
மூலம்- 20min

