Huttwil இல் உள்ள Bernstrasse இல் கடை ஒன்றுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த போது கடையில் ஒருவர் இருந்த போதும் அவருக்கு காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கார் ஒன்றில் தப்பிச் சென்றனர்.
பின்னர் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது, நேற்று பிற்பகல் 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூலம்- 20min

