வோல்கெட்ஸ்வில்லில் உள்ள ஒரு உணவகத்தில் கன்டோனல் காவல்துறையினரும் வோல்கெட்ஸ்வில் நகராட்சி பொலிசாரும் நடத்தப்பட்ட சோதனையின் போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 500 கிராம் கோகைன் மற்றும் சுமார் 1,500 சுவிஸ் பிராங்குகள் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
“உஸ்டர் மாவட்டத்தில் உள்ள பல உணவகங்களில் பொலிசார் நடத்திய சோதனையின் போது, வோல்கெட்ஸ்வில்லில் உள்ள ஒரு உணவகத்தில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்” என்று சூரிச் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
38 மற்றும் 46 வயதுடைய சிரியாவைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு, 58 வயதான சுவிஸ் நாட்டவரான மற்றொரு நபர் பொலிசில் சரணடைந்து கைது செய்யப்பட்டார்.
மூலம்- swissinfo

