துர்காவ் கன்டோனில் உள்ள வெய்ன்ஃபெல்டனில் உள்ள நீச்சல் குளத்தில் 3 வயதுச் சிறுமி நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மதியம் நீச்சல் குளத்தில் சிறுமி அசையாமல் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு உயிர்காப்பாளர் மற்றும் ஒரு மருத்துவ நிபுணர் உடனடியாக CPR ஐத் தொடங்கிய நிலையில், அது வெற்றிகரமாக இருந்தது.
இதன் பின்னர் சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக ரேகா ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.

