சீபாக்கில் உள்ள ஹூமட் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதிகளில் நேற்றுக் காலை 9 மணிக்கு ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீவிபத்தில், ஆறு தளங்களில் இரண்டு முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மாவட்டம் 11 இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ விரைவாக பரவியது.
எனினும், தீயணைப்புத் துறையினர் தீயை விரைவாக அணைத்துள்ளனர்.
எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், இரண்டு பூனைகள் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.