சுவிற்சர்லாந்து நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டில் சராசரியாக 1.3% சம்பள அதிகரிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
4500 தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
2026இல் 0.5% பணவீக்கம் எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனைக் கழித்த பின்னர், ஊழியர்கள் சுமார் 0.8% உண்மையான சம்பள உயர்வால் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சம்பள கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது, சம்பள அதிகரிப்புக்கான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் 0.3 சதவீதம் குறைந்துள்ளது.
கட்டுமானத்துறை சிறப்பாக செயற்பட்டு வரும் நிலையில், எதிர்பார்க்கப்படும் சம்பள அதிகரிப்பு 1.7% ஆக உள்ளது.
ஹோட்டல் மற்றும் உணவக நிறுவனங்களும் 1.5% ஒப்பீட்டளவில் அதிக சம்பள அதிகரிப்பை எதிர்பார்க்கின்றன.
மொத்த விற்பனை (0.9%), உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகம் (1.1%) ஆகியவற்றில் பலவீனமான முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மூலம்- swissinfo