தென்கிழக்கு பிரான்சின் சென்-போன்ஸில் சனிக்கிழமை பிற்பகல் இரண்டு இலகுரக விமானங்கள் மோதிய விபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டவரும் ஒரு ஜெர்மன் நாட்டவரும் உயிரிழந்துள்ளனர்.
பார்சிலோனெட் விமான நிலையத்திலிருந்து நேற்றுப் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஒரு இலகு விமானமும் ஒரு கிளைடரும் புறப்பட்டன.
சிறிது நேரத்திலேயே இந்த விபத்து உபயே பள்ளத்தாக்கில் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தீ பரவியதாகவும், விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணங்கள் இன்னமும் தெரியவரவில்லை.
மூலம்- swissinfo