16.6 C
New York
Thursday, September 11, 2025

வயலில் விழுந்த விமானம்- விமானி பலி.

Vaud கன்டோனில் உள்ள வேலிரெஸ்-சௌஸ்-ரான்சஸ் நகராட்சியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு  சிறிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

67 வயதுடைய விமானி ஒருவரால் இயக்கப்பட்ட விமானம், சனிக்கிழமை பிற்பகல் 2:50 மணியளவில் ஒரு வயலில் மோதி விழுந்தது. இந்த விபத்தில்  விமானி உயிரிழந்துள்ளார்.

தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர், விபத்தை நேரில் பார்த்தார்.

“விமானம் மிகவும் தாழ்வாகப் பறப்பதை நாங்கள் கண்டோம்; அது நேராக எங்களை நோக்கி வருவது போல் தோன்றியது. பின்னர் மூக்கு திடீரென குத்தியது,” என்று அவர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற அந்த பெண், விமானிக்கு வேறு உதவி எதையும் செய்ய முடியவில்லை.

தரையிறங்கும் போதே விபத்து ஏற்பட்டது.

Related Articles

Latest Articles