கிறீசில், 281 பேருடன் புறப்பட்ட விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றியதை அடுத்து, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
Condor விமானம் ஒன்று டுசெல்டார்ஃப் செல்லும் வழியில் கோர்புவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பிழம்புகள் காரணமாக பிரிண்டிசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் 273 பயணிகளும் எட்டு பணியாளர்களும் இருந்தனர் எனினும், எவரும் காயமடையவில்லை.
இதனால் சிலர் விமான நிலையத்திலேயே இரவைக் கழிக்க வேண்டியிருந்தது.
மூலம்- 20min.