கோர்செல்ஸ் நகரில் நேற்று மாலை கொலை செய்யப்பட்டவர்கள் தாயும் அவரது பத்து மற்றும் மூன்று வயதுடைய இரண்டு மகள்களும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் முன்னாள் கணவர்( 52, வயது) கைது செய்யப்பட்டு, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஜூன் 12 ஆம் திகதி முதல் தனது 47 வயதுடைய தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார், இப்போது லு லோக்கிளில் வசிக்கிறார் என்று நியூசாடெல் பொலிஸ் தலைவர் சைமன் பேச்லர் இன்று கூறினார்.
இவர்கள் கொலை செய்யப்பட்ட நேரம் இன்னும் தெரியவில்லை, மேலும் அது பிரேத பரிசோதனையால் தீர்மானிக்கப்படும்.
உயிரிழந்தவர்கள் அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் நீண்டகாலமாக சுவிசில் வசித்து வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo