கிறீன் லிபரல் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கொரினா கிரெடிக் (37) மீண்டும் ஒரு குழந்தைக்குத் தாயாகியுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
அவருக்கு ஜெரால்டின் நட்ஜா என்ற பெண் குழந்தை ஓகஸ்ட் 12 திகதி சூரிச்சில் பிறந்துள்ளது.
இது கிரெடிக்கின் மூன்றாவது குழந்தை. அவருக்கு ஏற்கனவே 9 மற்றும் 13 வயதுகளில், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை பிறந்துள்ளதால், இலையுதிர் கால அமர்வின் போது அவர் கூட்டாட்சி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமாட்டார்.
இந்த நேரத்தில் நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பொறுப்பை துணை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பீட் ஃப்ளாச் (60) ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.