லூசெர்ன் ஏரியில் ஜூலை 28 ஆம் திகதி மூழ்கிய சிறிய விமானம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டது.
விமானம் தண்ணீரில் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் சேற்றில் சிக்கியிருந்தது.
இன்று காலையில், மீட்புப் பணியாளர்கள் முதலில் விமானத்தை தண்ணீரின் மேற்பரப்பிலிருந்து சுமார் 15 மீட்டர் கீழ் வரை உயர்த்தினர்.
பின்னர் அதை ஒரு கிடைமட்ட நிலைக்கு கொண்டு வந்து நிலைப்படுத்தினர்.
இதையடுத்து விமானத்திலிருந்து தண்ணீர் வெளியேறுவதற்காக சுழியோடிகள் துளைகளை போட்டனர்.
பின்னர் விமானம் தண்ணீரிலிருந்து மேலே தூக்கப்பட்டு ஒரு கிரேன் மூலம் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது.
மூலம்- bluewin