பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான சர்வதேச ரயில் இணைப்புகளுக்காக, சுவிஸ் பெடரல் ரயில்வே 40 அதிவேக ரயில்களை குத்தகைக்கு எடுக்கவுள்ளது.
ரயில்வே நிறுவனத்தின் இறுக்கமான நிதி நிலைமையே இதற்குக் காரணம் என்று சுவிஸ் பெடரல் ரயில்வே பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும், இருப்பினும், 40 ரயில்களை குத்தகைக்கு எடுப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதிவேக ரயில்களை குத்தகைக்கு எடுப்பதற்கான விருப்பத்தை, சுவிஸ் ரயில்வே நிறுவனம் ஏற்கனவே மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தது.
15 ஆண்டு இயக்க குத்தகை ஒப்பந்தம் குறித்து பேச்சு இருந்தது. வசந்த காலத்தில் சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ள மல்டி-கரண்ட் அதிவேக ரயில்கள் 2030களில் சேவைக்கு வரக்கூடும்.
அவை சர்வதேச இணைப்புகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, இத்தாலி மற்றும் பிரான்சுக்கும், பார்சிலோனா அல்லது லண்டன் போன்ற இடங்களுக்கும் இது சாத்தியமாகும்.
மூலம்- swissinfo