டோஹாவில் ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை சுவிட்சர்லாந்து விமர்சித்துள்ளது.
இது “கட்டாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் தெளிவான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்” என்று சுவிஸ் கூறியுள்ளது.
“சர்வதேச சட்டமும் ஐ.நா. சாசனமும் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்,” என்று எக்ஸ் சமூக தளத்தில், பெடரல் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பேச்சுக்கள் வெற்றிபெற வேண்டும். மத்திய கிழக்கில் மோதலுக்கு இராணுவத் தீர்வு இல்லை” என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo