மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட சுவிஸ் கன்டோன்களின் பட்டியலில், Zug, Basel-City மற்றும் Zurich ஆகியவை முதலிடத்தில் உள்ளன என்று UBS ஆய்வு தெரிவிக்கிறது.
Graubünden இந்த தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது.
ஒரு பிராந்தியத்தின் நீண்டகால பொருளாதார விரிவாக்க வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்கும் 57 அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டு, Cantonal Competitiveness Indicator (CCI) என்ற இந்த தரவரிசை பட்டியலிடப்பட்டுள்ளது.
இதன்படி, Vaud (78), Aargau (77), Geneva (73), Basel-Cuntry (73), Lucerne (72), Schwyz (71) மற்றும் Schaffhausen (68) ஆகியவை முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.
டிசினோ 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மோசமான புள்ளிகளை, கிராபுண்டன் (44), வலைஸ் (44) மற்றும் ஜூரா (33) ஆகியன பெற்றுள்ளன.
மூலம்- swissinfo