வலாய்ஸ் மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளில் வசிக்கும் சுவிஸ் குடிமக்கள் செனட்டில் தங்கள் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க முடியும்.
கன்டோனல் நாடாளுமன்றம் நேற்று இது தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் கிடைத்திருந்தன.
13 கன்டோன்களில், செனட் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு உரிமை உள்ளது. இது குறிப்பாக பெர்ன், ஃப்ரிபோர்க் மற்றும் ஜெனீவாவைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு பொருந்தும்.
இருப்பினும், வலாய்ஸ் மக்களுக்கு இது பொருந்தாது.
புதிய கன்டோனல் அரசியலமைப்பின் வரைவில் இந்த நிலைமையை மாற்றுவதற்கான ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo