லொசான் பொலிஸ் தளபதி ஒலிவர் போட்டெரான் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். ஜூலை 1ஆம் திகதி அவர் பதவியில் இருந்து விலகுகிறார்.
59 வயதான அவர் 2018 ஆம் ஆண்டு முதல் நகர பொலிசுக்கு தலைமை தாங்கி வருகிறார்.
சமீபத்திய வாரங்களில் லொசான் பொலிசை உலுக்கிய கலவரங்களுடன் போட்டெரோனின் பதவி விலகலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நகர பாதுகாப்பு அதிகாரி பியர்-அன்டோயின் ஹில்ட்பிரான்ட், உறுதிப்படுத்தினார்.
பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில், காவல்துறை அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். எனவே அவர் ஜூலை மாதம் ஓய்வு பெறுவார்.
மூலம்- 20min

