எஃப்ரெடிகான் மற்றும் வின்டர்தர் இடையேயான பாதையில் செவ்வாய்க்கிழமை காலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரு ரயில் தடைப்பட்டு நின்றதால், பல ரயில்கள் தாமதம் அடைந்தன. சில ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டன.
இதனால் பயணிகள் உரிய நேரத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த இடையூறு குறைந்தது காலை 8 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்ட போது, காலை 8:30 மணிக்கு சற்று முன்னர், சூரிச் HB – வின்டர்தர் பாதையில் ரயில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
மூலம்- 20min

