ரீயுஸ்புல் மாவட்டத்தில் உள்ள ரூபிஜென் பாடசாலைக் கட்டிடத்தின் சுவரில் பெரிய, சிவப்பு எழுத்துக்களில் “திங்கட்கிழமை துப்பாக்கிச் சூடு” என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்ப விசாரணையில், பாடசாலை ஊழியர் மீதிருந்த வெறுப்பினால் இதனைச் செய்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
லூசெர்ன் மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சிறுவர்கள் சொத்து சேதம் மற்றும் பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
விசாரணை முடியும் வரை அவர்கள் நிரபராதிகள் என்று கருதப்படுகிறது.
“நான் உன்னைக் கொன்றுவிடுவேன்” மற்றும் “உன் குடும்பத்தைக் கொன்றுவிடுவேன், என்ற அச்சுறுத்தல்கள் ஒரு பாடசாலை ஊழியரை நோக்கி வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மூலம்- 20min

