ஜெம்பனில் உள்ள டோர்னாச்ஸ்ட்ராஸில் இரண்டு வாகனங்களுக்கிடையில் சிக்கி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார் என சோலோதர்ன் பொலிசார் அறிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை, பிற்பகல் 3 மணியளவில், , 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் டோர்னாச்ஸ்ட்ராஸில் ஜெம்பனில் இருந்து டோர்னாச் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
அவர் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது. எதிரே வந்த ஒரு டெலிவரி டிரக் மீது மோதினார்.
இந்த மோதலின் விளைவாக டெலிவரி வான் எதிரே வந்த பாதையில் சென்றது, அங்கு அது மற்றொரு டெலிவரி வான் மீது மோதியது.
இரண்டு வாகனங்களுக்கும் இடையில் சிக்கிய 20 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் காரணமாக, ஜெம்பன் மற்றும் டோர்னாச் இடையேயான சாலை பல மணி நேரம் மூடப்பட்டது.
மூலம்- 20min

