ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிட ஒற்றுமை பொறிமுறையில் கொள்கையளவில் சுவிட்சர்லாந்து பங்கேற்க,நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
சுவிஸ் பிரதிநிதிகள் சபை செவ்வாயன்று, இந்தப் பொறிமுறையில் பங்கேற்பது உட்பட ஐரோப்பிய ஒன்றிய புகலிட மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் விதிகளை ஏற்றுக்கொள்வதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்டது.
இதற்கு 101 வாக்குகள் ஆதரவாகவும், 72 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 22உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
மூலம்- swissinfo

