-0.7 C
New York
Tuesday, December 30, 2025

சக ஊழியரை விட 333 மடங்கு அதிக சம்பளம் பெற்ற வசந்த் நரசிம்மன்.

கடந்த ஆண்டு, பெரிய சுவிஸ் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள், குறைந்த ஊதியம் பெறும் தங்கள் ஊழியர்களை விட சராசரியாக 143 மடங்கு அதிகமாக சம்பளம் பெற்றுள்ளனர்.

தொழிற்சங்கமான யூனியாவின் ஆய்வின்படி, சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த இடைவெளி சற்று குறைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், அதிக மற்றும் குறைந்த ஊதியங்களுக்கு இடையிலான இடைவெளி 1:150 ஆக இருந்தது என்று தொழிற்சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையிலான ஊதியம் பெறுபவர்களைக் கொண்ட சில நிறுவனங்கள் இந்த இடைவெளியைக் குறைத்துள்ளன.

ஆய்வின்படி, நிர்வாக சம்பளம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஊதிய இடைவெளிகள் விரிவடைகின்றன.

எடுத்துக்காட்டாக, நோவார்டிஸ் தலைமை நிர்வாக அதிகாரி வசந்த் நரசிம்மன், 19.2 மில்லியன் சம்பளம் பெற்றுள்ளார்.

அவரது குறைந்த ஊதியம் பெறும் சக ஊழியரை விட 333 மடங்கு அதிகமான சம்பளம் அவருக்கு கிடைத்துள்ளது.

இதே போன்ற உதாரணங்களை பார்ட்னர்ஸ் குழுமத்துடனும் 1:328 விகிதத்துடன் கால்டெர்மா என்ற மருந்துக் குழுமத்துடன் , 1:298 என்ற அடிப்படையிலும் காணலாம். 1:276 விகித இடைவெளியுடன் UBS நான்காவது இடத்தில் உள்ளது.

இதற்கு நேர்மாறாக, Coop மற்றும் SBB நிறுவனங்களில் 1:11 என்ற இடைவெளியுடன் மிகக் குறைந்த ஊதிய இடைவெளி காணப்படுகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles