காசாவில் காயமடைந்த குழந்தைகளை சிகிச்சைக்காக கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை சுவிஸ் அரசாங்கமும் மாகாணங்களும் தற்போது ஆராய்ந்து வருகின்றன.
சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான பாரம்பரியத்தின்படி, அவர்கள் குணமடையும் வரை அவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படலாம் என்று நீதி அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை, நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்துச் செல்வதற்கான சுவிஸ் அரசாங்கத்தின் முடிவைக் குறிப்பிட்டார்.
இதற்கமைய 20 குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வரப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், நீதி அமைச்சு இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை.
அதிகாரிகள் தற்போது இதை எவ்வாறு செயல்படுத்த முடியும், எத்தனை காயமடைந்தவர்களுக்கு இந்த வசதியை வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.
காசா பகுதிக்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும், ஏனெனில் மோதல் காரணமாக அந்தப் பகுதியில் மருத்துவ சேவை முற்றிலும் போதுமானதாக இல்லை.
பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை ஏற்கனவே போர் வலயத்தில் இருந்து நோயாளிகளை தங்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளன.
மூலம்- swissinfo

